அழகு குறிப்புகள்

ஆரோக்கியமான முகச்சருமம் வேண்டுமா? அப்போ இத பண்ணுங்க…

பழங்களை சாப்பிடுவதால் அழகான, ஆரோக்கியமான முக அழகையும், ஊட்டச்சத்துகளைப் பெறலாம். அதேசமயம் இப்படி அவற்றைக் கொண்டு ஃபுரூட் ஃபேஸ் மாஸ்க் அப்ளை செய்தாலும் ஆரோக்கியச் சருமம் பெறலாம். எப்படி என்று பார்க்கலாம். நன்கு பழுத்த வாழைப்பழம் அதோடு 1 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனால் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து பருக்கள், தோல் அழற்சி இல்லாமல் பார்த்துக்கொள்ளும்.

ஆப்பிள் சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதோடு கொலாஜின் அடுக்குகளை அதிகரிக்கும். எனவே 1 ஆப்பிளுக்கு 1 ஸ்பூன் தேன் என எடுத்துக்கொண்டு நன்கு மசித்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். பப்பாளி என்சைம் நிறைவாகக் கொண்ட பழம். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி சுத்திகரிக்கும் வேலைகளை செய்யும். எனவே அதை நன்கு மசித்து ரோஸ் வாட்டன் 1 ஸ்பூன் ஊற்றி கலந்துகொள்ளுங்கள். பின் முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.