தகவல்கள்தமிழ்நாடு

சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழ் அறிஞர்கள், உதவியாளர்கள் இனி அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம்..

சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழ் அறிஞர்கள், ராணுவ வீரர்களின் உதவியாளர்கள் அரசு பஸ்சில் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் அவர்தம் வாரிசுதாரர்கள், தமிழ் மொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டிற்கு பெரும் தொண்டாற்றிய தமிழறிஞர்கள் மற்றும் எல்லை காவலர்கள் அவர்தம் வாரிசுதாரர்கள் (1836 பேர்) ஆகியோர்களுக்கு அரசு பேருந்துகளில் தமிழகம் முழுவதும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்திட அனுமதி வழங்கப்பட்டு, பேருந்துகளில் பயணம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள், அவர்தம் வாரிசுதாரர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் எல்லைக் காவலர்கள், அவர்தம் வாரிசுதாரர்கள், வயது முதிர்வு காரணமாக தனியாக பயணம் செய்திட இயலாத நிலையில் உடன் பயணிக்கும் உதவியாளருக்கும் பேருந்துகளில் கட்டணம் இல்லா பயண சலுகை வழங்கிட வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அந்த கோரிக்கையினை பணிவோடு பரிசீலித்த முதல்-அமைச்சர் இதனை உடனடியாக ஆவண செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து கடந்த 24.3.2020 அன்று போக்குவரத்து துறையின் மானிய கோரிக்கையில் இவர்களின் உதவியாளர் ஒருவருக்கு கட்டணம் இல்லா பயண அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ் துறையின் மூலமாக அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களை அணுகி மேற்குறிப்பிட்ட 60 வயதுக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், அவர்தம் வாரிசுதாரர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் எல்லைக் காவலர்கள், அவர்தம் வாரிசு தாரர்கள் ஆகியோர்கள் அவர்தம் உதவியாளரின் விவரங்களை சமர்பித்து அனைத்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் தமிழகம் முழுவதும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்திட பயண அட்டையினை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.