டிஜிட்டல் விளம்பர வர்த்தகத்தில் கூகுள் நிறுவனத்துக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் உள்ளது. சமீபத்தில் ஜியோவின் பங்குகளை பேஸ்புக் நிறுவனம் 9.99% வாங்கிய நிலையில், இப்போது வோடபோன் ஐடியாவின் பங்குகளை வாங்க கூகுள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வோடபோன் ஐடியாவில் முதலீடு செய்யும் கூகுள்:
கடும் கடன் நெருக்கடியில் சிக்கி இருக்கும் வோடபோன் ஐடியா நிறுவனம் மத்திய அரசுக்கு 54 ஆயிரம் கோடி ரூபாய் கடன் செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் நெருக்கடியில் சிக்கி இருக்கும் வோடபோன் ஐடியாவின் 5% பங்குகளை வாங்க கூகுள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.ஜியோ வருகைக்கு முன்பு 8 டெலிகாம் நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தன. ஆனால் இப்போது ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களே உள்ளன. ஐடியா நிறுவனம் வோடபோனுடன் இணைந்தது. ஜியோவில் பேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே முதலீடு செய்துள்ளதால், கூகுள் வோடபோன் ஐடியாவில் முதலீடு செய்ய வாய்ப்புகள் அதிகம். அப்படி முதலீடு செய்தால் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி எதிர்பாராத அளவுக்கு உயரும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட காலமாக டெலிகாம் நிறுவனத்தில் முதலீடு செய்ய நினைத்த கூகுள் நிறுவனத்துக்கு இது நல்ல வாய்ப்பு தான். அதேபோல கடன் சுமையில் தவிக்கும் வோடபோன் மீண்டும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வளர்ச்சி அடையவும் செய்யலாம்.