பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு எந்த தேதியில் 100% சதவீதம் கட்டுப்படுத்தப்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. சிங்கப்பூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேட்டா டிரைவன் இன்னோவேஷன் என்ற லேப் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் வைரஸ் முழுவதுமாக கட்டுப்படுத்தப்படும் தேதிகள் கணிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எந்தளவில் இருக்கிறது என்ற உண்மையான தகவல்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
டேட்டா டிரைவன் இன்னோவேஷன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, இதன் முடிவுகளை மூன்று படிநிலைகளாக வெளியிட்டுள்ளனர். அதாவது 97 சதவீதம், 99 சதவீதம், 100 சதவீதம் வைரஸ் கட்டுப்படுத்தப்படும் தேதிகளை கணக்கிட்டுள்ளனர்.இந்தியாவில் வரும் மே 21ஆம் தேதி 97 சதவீதம் கட்டுப்படுத்தப்படும். இதையடுத்து மே 31ஆம் தேதி 99 சதவீதமும், ஜூலை 25ஆம் தேதி 100 சதவீதமும் வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 8ஆம் தேதி கொரோனா வைரஸ் முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்படும். கடைசியாக பஹ்ரைனில் வரும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி வைரஸ் தொற்று முடிவுக்கு வரும். கத்தாரில் பிப்ரவரி 15ஆம் தேதி கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும்.
இந்த ஆய்வின் நோக்கம் என்பது மக்களிடையே இருக்கும் பதற்றத்தை குறைத்து நேர்மறையான எண்ணங்களை விதைக்கவே ஆகும்.இந்த கணக்கீடு உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் ஏற்படும் வைரஸ் தொற்றின் தரவுகளுக்கு ஏற்ப மாறுபடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்றின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு மக்களை தயார்படுத்துவதற்காகவும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த தகவல்கள் அனைத்தும் ஒரு கணக்கீடு மட்டுமே என்பதை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ddi.utd.edu.sg என்