சிறையில் இருக்கும் தந்தை ஒருவர் தனது மகளுடன் வீடியோ காலில் பேசும் வீடியோ, பலரையும் கண்கலங்க செய்துள்ளது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக தமிழக சிறையில் இருப்பவர்களை அவரது உறவினர்கள் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது . கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தங்களது குடும்பத்தினர் பாதுகாப்பாக உள்ளார்களா என்பது குறித்து சிறையில் இருபவர்கள் பதற்றத்தில் இருந்தனர்.
இந்நிலையில் சிறையில் இருப்பவர்களின் பதற்றத்தை குறைக்கும் விதமாக, தமிழக சிறைத்துறை தற்போது நல்ல திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. சிறையில் இருப்பவர்கள் சிறைத்துறை வழங்கும் செல்போன் மூலமாக வீடியோ காலில் தங்களது வீட்டில் இருபவர்களோடு பேசி கொள்ளலாம். அதன்படி சிறையில் இருக்கும் நபர் ஒருவர் தனது மகளுடன் வீடியோ காலில் பேசிய வீடியோ தற்போது பலரையும் கலங்க செய்துள்ளது.
அதில் பேசும் சிறுமி, ” அப்பா நீ சாப்பிட்டியா பா” என அழுது கொண்டே கேட்கிறார்.
அதற்கு அந்த தந்தை நான் சாப்பிட்டேன், நீங்க பத்திரமாக இருங்க, ஹாட் வாட்டர் குடிங்க’ என ஆறுதல் கூறுகிறார்.
அழுது கொண்டே இருக்கும் தனது மகளிடம், அம்மாவிடம் போனை கொடு என அவர் கூறுவதோடு, அந்த வீடியோ நிறைவடைகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் இது மிகவும் நெகிழ்ச்சியான திட்டம், குற்றம் செய்தாலும், அவர்களும் மனிதர்கள் தானே என நெட்டிசன்கள் பலரும் உருக்கமாக பதிவிட்டு வருகிறார்கள். இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் மற்ற மாநிலங்களும் இந்த திட்டத்தை பின்பற்றலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.தமிழக அரசு இவ்வாறு ஒரு புது முயற்சியை முன்னெடுத்துள்ளது மிகவும் பாராட்டத்தக்க செயல்.