விஜயகாந்த்துக்கு கொரோனா இல்லை – தேமுதிக விளக்கம்.
வழக்கமான உடல் பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனைக்கு சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்டதாகவும், அது சரிசெய்யப்பட்டு தற்போது பூரண உடல் நலத்துடன் இருப்பதாகவும் தேமுதிக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பதாக வெளியான தகவல், விஜயகாந்தின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருந்தது.அதிலும் இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விஜயகாந்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற தகவலால் தேமுதிக கட்சி நிர்வாகிகளுக்கிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது கட்சித் தலைமை அதைத் தெளிவுபடுத்தும் விதத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் விவரம் பின் வருமாறு:விஜயகாந்த்துக்கு வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், பரிசோதனைக்காக சென்ற போது, விஜயகாந்த்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் விஜயகாந்த் உள்ளார்.இவ்வாறு தேமுதிக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.