வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி கொள்ளையடிக்கும் மோசடிக் கும்பல்: முக்கிய குற்றவாளி கைது…
வேலூர்மாவட்டம்,வேலூர் சஞ்சீவி பிள்ளைதெருவில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் செயல்படுவதாக ஒரு இடத்தை ரகசிய தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமாருக்கு கிடைத்துள்ளது. இந்த கும்பலை சேர்ந்த மூளையாக செயல்பட்ட தஞ்சாவூரை சேர்ந்த முருகானந்தம் என்பவரை தனிப்படையினர் தஞ்சாவூரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் வேலூரில் சார்பனாமேடு பகுதியில் சஞ்சீவி பிள்ளை தெருவில் பாபு என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து பி.கே.எஸ் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி என்ற பெயரில் கண்ணய்யன் சம்பத் என்பவர் கடந்த6 மாதகாலமாக அந்த வீட்டில் நடத்தி வந்துள்ளார் இவர் சட்டத்திற்கு புறம்பான வகையில் இணையதளம் வழியாக தொலைபேசி அழைப்புகள் வழங்கும் சேவை மையம் எந்த உரிமையும் இல்லாமல் நடத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இந்த இடத்தில் இருந்து கொண்டு வங்கி மேலாளர் பேசுவதை போல் பேசி ஏடிஎம் கார்டு புதுப்பிக்க வேண்டுமென்று கூறி பின் நம்பரை பெற்று சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து பணத்தை நூதன முறையில் திருடி வந்துள்ளனர் காவல்துறையின்ரோ மற்றவர்களோ இவர்கள் கண்காணித்தால் நிமிடத்திற்கு நிமிடம் வேறு இடத்தில் உள்ளதை போல் காட்டுவதற்காக இது போல் பல இடங்களில் வாடகைக்கு எடுத்து அலுவலகங்களை திறந்து நாடு முழுவதும் மோசடி செயலில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளதுடன், இவர்கள் தொலை பேசிகளை பயன்படுத்தி சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
தப்பியோடிய கண்ணய்யன் சம்பத்தை தேடி வருகின்றனர் காவல்துறையினர். வேலூர் வடக்கு காவல்துறையினர் துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில், அந்த வீட்டில் சோதனை செய்த போது கணினி இண்டர் நெட் ரூட்டர்,மோடம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனிப்படை அமைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கும்பல் ஹவாலா மற்றும் தங்கம் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருக்கலாம் என விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது ஆளில்லாத வீட்டில் 24 மணி நேரமும் கணினி இயங்கும் வகையில் இன்வர்டர் பேட்டரிகளையும் அவர்கள் இணைத்துள்ளனர்.