ரேஷன் கடைகளில், தொழிற்சாலைகளில், தனியார் நிறுவனங்களில், வங்கிகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்…
கொரோனா தடுப்பு பணிக்காக, தீவிரமாக கண்காணிக்கப்படும் என்னும் எச்சரிக்கையுடன் சென்னை மாநகராட்சி சில விதிகளைப் பட்டியலிட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் செய்யவேண்டியது என்ன?
- 2000 கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளை பிரிக்க வேண்டும்.
- மக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற தேவையான நடவடிக்கைகளை செய்ய வேண்டும்.
• டோக்கனில் குறிப்பிட்டு உள்ள நாள், நேரத்தில் மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும்.
• பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என எச்சரிக்க வேண்டும்.
தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் செய்ய வேண்டியது என்ன?
• கட்டுமான நிறுவனங்கள், தொழிற்சாலையில் உள்ளிட்ட இடங்களில் தனிமனித இடைவெளி கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
• அனைத்து பணியாளர்களும் முகக்கவசம், கையுறை, முகக்கவச கண்ணாடி அணிய வேண்டும்.
• தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் கூட்டங்கள் நடத்தி தேவையான பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
வங்கிகளில் செய்ய வேண்டியது என்ன?
• வங்கியினுள் வாடிக்கையாளர்கள் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
• டோக்கன் முறை, சரியாக பின்பற்றப் பட வேண்டும். வங்கியினுள் ஒரு நேரத்தில் 5 வாடிக்கையாளர்களுக்கு மேல் இருக்க கூடாது.
• பாஸ் புக் பதிவு, குறைந்த அளவிலான பண பரிவர்த்தனை உள்ளிட்ட அத்தியாவசியம் இல்லாத பணிகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்க கூடாது.
• ஏ டி எம் மையங்களில் தேவையான பணத்தை நிரப்பி, மக்கள் வங்கிகளுக்கு கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்.ஒவ்வொரு ஏ டி எம் மையமும் ஒரு நாளைக்கு 5 முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
• ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று பணத்தை வழங்க வேண்டும்.
• வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அணியாதவர்கள் பண பரிவர்த்தனை செய்ய அனுமதிக்க கூடாது.
மேலும்,மாநகராட்சியின் கண்காணிப்பு குழுவினர் மூலம் இந்த நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். உத்தரவுகளை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் நபர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையர் எச்சரித்து உள்ளார்.