ரஷ்யா காரோண தடுப்பு மருந்து கண்டு பிடித்து விட்டதா..? WHO சொல்வது என்ன?
பரிசோதனை ஆராய்ச்சி நடத்தப்பட்ட செக்கினோ ஃபர்ஸ்ட் மாஸ்கோ ஸ்டேட் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் வடிம் டராசவு, “உலகின் முதல் கோவிட்-19 தடுப்பூசிக்கான மனிதப் பரிசோதனை தன்னார்வலர்களிடம் நடத்தப்பட்டு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. ஆராய்ச்சியில் பங்கேற்ற முதற்கட்ட குழு தன்னார்வலர்கள் ஜூலை 15-ம் தேதியும், இரண்டாம் கட்ட குழு தன்னார்வலர்கள் ஜூலை 20-ம் தேதியும் வீட்டுக்கு அனுப்பப்படுவர்” என்று கூறியுள்ளார்.
பல்கலைக்கழகத்தின் Medical Parasitology, Tropical and Vector-Borne Diseases மையத்தின் இயக்குநர் அலெக்ஸாண்டர் லுக்ஷவ்,“நடத்தப்பட்ட இந்தக் கட்ட ஆராய்ச்சியின் நோக்கம், மனிதர்களிடம் செலுத்துவதற்கு இம்மருந்து பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்வதே. பாதுகாப்பானது என்று தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சந்தையில் உள்ள மற்ற தடுப்பு மருந்துகளின் பாதுகாப்புக்கு இணையானதாக இது உள்ளது” என்று கூறியுள்ளதாக ANI செய்தி முகமை தெரிவித்துள்ளது. மிக அதிகளவு நபர்களிடம் சோதிக்கப்படும் Phase 3 ட்ரையலுக்கு பிறகே, தடுப்பூசியின் திறன் குறித்து தெளிவான முடிவு கிடைக்கும் என்று உலக சுகாகார நிறுவனம் தெரிவித்துள்ளது.