மு.க ஸ்டாலின் போராட்டம் நடத்த விரும்புகிறாரா? – அமைச்சர் தங்கமணி
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றமே ஏற்றுக் கொண்ட மின் கட்டண கணக்கீட்டு முறையை குளறுபடி என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
முரண்பட்ட கருத்துக்கள் தி.மு.க.வின் முரண்பாடான அரசியலை காட்டுகிறது என்று கூறியுள்ள அமைச்சர் தங்கமணி, ”அரசு வழங்கும் மின் சலுகைகளை மறைத்து பிற மாநிலங்களின் சிறிய சலுகைகளை கூறுவதா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் தான் வீட்டு உபயோக மின் கட்டணம் மிக மிக குறைவு என்றும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 11 ஆயிரம் கோடி ரூபாய் சலுகை வழங்கப்பட்டிருப்பதாகவும் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார். நீதிமன்றமே ஏற்றுக்கொண்ட மின் கட்டண கணக்கீட்டு முறையை குளறுபடி என்பதா? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி கண்டனம் தெரிவித்துள்ளார்