சென்னை பல்லாவரம் பம்மல் சரஸ்வதிபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இதில் விழுப்புரத்தை சேர்ந்த மூர்த்தி 38 என்பவர் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் கட்டிட வேலை எதுவும் இல்லாத காரணத்தினால் கட்டுமான இடத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார் அப்பொழுது பக்கத்துவீட்டில் தண்ணீர் ஊற்றும் சத்தம் கேட்டவுடன் குளியல் அறையை எட்டிப் பார்த்துள்ளார்.
எட்டிப்பார்த்ததை பார்த்த அந்தப் பெண் கூச்சலிடவே திருமணம் ஆகி ஓரிரு மாதங்கள் ஆனதால் கொந்தளித்த அந்த பெண்ணின் கணவன், மூர்த்தி என்பவரை பிடித்து காது கிழிய அடித்து சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு ஒப்படைத்தார். பின்னர் இதுகுறித்து அந்த பெண் புகார் அளித்த நிலையில் மூர்த்தியை கைது செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு எண் 4,இன் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்பினர்.