புற்றுநோயை குணமாக்க நம் உடம்பிலேயே ஒரு உறுப்பு இருக்கு – ஆய்வில் கண்டுபிடிப்பு
வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சிகளும், தொழில்நுட்பங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக உடல் சம்பந்தப்பட்ட நோய்களுக்காக சிகிச்சை அளிக்கும் முறையில் பல்வேறு நவீன தொழில் நுட்பங்கள், மருந்துகள் ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கக்கூடிய ஒரு உறுப்பை டச்சு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதுவும் மனித உடலில் உள்ள ஒரு உறுப்பு. இது பல நூற்றாண்டுகளாக மருத்துவ அறிவியல் துறையில் நிபுணர்களால் கவனிக்கப்படாமல் போய்விட்டது. நெதர்லாந்து புற்றுநோய் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தொண்டையின் மேல் பகுதியில் ஒரு புதிய உறுப்பை கண்டுபிடித்துள்ளனர். நாசி குழி மற்றும் தொண்டை சந்திக்கும் மனித மண்டைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் இவை. இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் கதிரியக்க சிகிச்சை மற்றும் புற்றுநோயியல் இதழில் வெளியிடப்பட்டன.
சுமார் 100 நோயாளிகளைப் பரிசோதித்த பின்னர் சுரப்பிகள் இருப்பதை உறுதிப்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். லைவ் சயின்ஸ்.காம்-ன் கூற்றுப்படி, உமிழ்நீர் சுரப்பிகளின் தொகுப்பான புதிய உறுப்பு, சி.டி ஸ்கேன் மற்றும் PSMA PET -CT எனப்படும் பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி ஸ்கேன் ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் புரோஸ்டேட் புற்றுநோயை அதாவது ட்யூமர் கட்டியின் வளர்ச்சி குறித்து ஆராய்ந்த போது தற்செயலாக தொண்டையின் மேல் பகுதியில் இந்த உறுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து புற்றுநோய் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த உறுப்புகளை “டூபரியல் உமிழ்நீர் சுரப்பிகள்” (tubarial salivary glands) என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இந்த கண்டுபிடிப்பு புற்றுநோய் நோயாளிகளுக்கு கதிர்வீச்சு சிகிச்சையின் பக்க விளைவுகளை குறைக்க உதவும் என்று கூறியுள்ளனர். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சுரப்பிகள் சுமார் 1.5 அங்குல நீளம் கொண்டவை. இது மூக்கு மற்றும் வாயின் பின்னால் உள்ள தொண்டையை உயவூட்டுவதோடு ஈரப்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது.
இந்த புதிய கண்டுபிடிப்பு புற்றுநோய்க்கு சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் என்று ஆய்வின் இணை ஆசிரியரும் நெதர்லாந்து புற்றுநோய் நிறுவனத்தின் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணருமான வவுட்டர் வோகல் லைவ் சயின்ஸ்.காமிடம் தெரிவித்தார். இந்த கண்டுபிடிப்புக்கு முன்னர், மனிதர்களில் அறியப்பட்ட மூன்று பெரிய உமிழ்நீர் சுரப்பிகள் இருந்தன. அதில் ஒன்று நாக்கின் கீழ், மற்றொன்று தாடையின் கீழ் மற்றும் தாடையின் பின்புறத்தில் அதாவது கன்னத்தின் பின்னால் அமைந்துள்ளது. அவற்றிற்கு அப்பால், தொண்டை மற்றும் வாயின் சளி திசு முழுவதும் ஆயிரம் நுண்ணிய உமிழ்நீர் சுரப்பிகள் சிதறிக்கிடக்கின்றன” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். நாசோபார்னக்ஸ் பகுதிக்கு பின்னால் ஒரு பெரிய உமிழ்நீர் சுரப்பி இருப்பது இது வரை தெரியவில்லை. தலை மற்றும் கழுத்தில் உள்ள புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான கதிர்வீச்சு சிகிச்சையின் போது, மருத்துவர்கள் முக்கிய உமிழ்நீர் சுரப்பி சேதமடைவதை தவிர்ப்பதற்கு மருத்துவர்கள் முயற்சி செய்வது வழக்கம்.
ஏனெனில் அவை சேதமடைவதால் நோயாளிக்கு பேசுவதற்கும், விழுங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் கடினமாக இருக்கும். அத்தகைய சந்தர்ப்பத்தில், புதிய சுரப்பியின் கண்டுபிடிப்பு புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க மிகவும் உதவியாக இருக்கும். எனவே எங்கள் அடுத்த நடவடிக்கை, இந்த புதிய சுரப்பு உறுப்புகளை எந்த நோயாளிக்கு செலுத்தினால் அவர்களை சிறந்த முறையில் காப்பாற்ற முடியும் என்பது பற்றி ஆராய இருக்கிறோம். எங்களால் இதைச் செய்ய முடிந்தால், நோயாளிகள் குறைவான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். இது சிகிச்சையின் பின்னர் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்திற்கும் பயனளிக்கும் என்று வோகல் கூறியுள்ளார்.