தமிழ் நாட்டின் பாரம்பரிய கிழங்கு வகை தான் பனங்கிழங்கு… பொங்கல் சமயம் வந்துவிட்டால் போதும், எங்கும் பனங்கிழங்கு தான் !! இந்த தீபாவளிக்கு பனங்கிழங்கை வைத்து வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும் ஒரு ஸ்வீட் செய்யலாம் வாங்க..
தேவையான பொருட்கள்
அவித்த பனங்கிழங்கு – 7 /8
நறுக்கப்பட்ட தேங்காய் – ஒரு கைப்பிடி அளவு அல்லது சிறிது கூட.
பனஞ்சக்கரை – 4-5 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பருப்புகள் (பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, அக்ரூட் ….)
நெய் – சிறிதளவு
வழிமுறைகள்
- அவித்த பனங்கிழங்குகளை எடுத்து அவற்றின் தோலையும் நடுப்பகுதியில் இருக்கும் குச்சி போன்றவற்றையும் நீக்க வேண்டும்.
- பிறகு நார்களை உரித்தெடுக்க வேண்டும். இயன்றளவு நார்களை நீக்கிவிட வேண்டும்.
- பிறகு பனங்கிழங்குகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- பனங்கிழங்கு துண்டுக்கள், தேங்காய் துண்டுகள் இரண்டையும் மிக்ஸியில் அரைக்க வேண்டும். மிகவும் பேஸ்ட் போல் வரக் கூடாது.
- ஒரு கிண்ணத்தில் அரைத்த கலவையை சேர்த்து, அதனுடன் பனஞ்சக்கரையும் பொடீத்த பருப்பு வகைகளையும் சேர்த்து நன்றாக பிசையவும்.
- கையில் சிறிது நெய் தடவி அக்கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
மேலே சிறிது பொடித்த பாதாம் முந்திரி தூவி பரிமாறவும்
சுவையான பனங்கிழங்கு லட்டு ரெடி..