இந்தியாதகவல்கள்தமிழ்நாடு

பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம், கண் எரிச்சல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..?

நாடு முழுவதும் நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், பாதுகாப்பாக இந்தப் பண்டிகை கொண்டாடுவது குறித்து சில குறிப்புகளை பார்க்கலாம்.

தீபாவளி பண்டிகையொட்டி, பட்டாசுகளை வெடிப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். எப்போதும், பட்டாசு வெடிக்கும் போது, ஒரு பக்கெட் தண்ணீரை அருகாமையில் வைத்துக் கொள்ள வேண்டும். வெடிக்காத பட்டாசுகள், பயன்படுத்தப்பட்ட கம்பி மத்தாப்புகளின் மீது தண்ணீரை தெளிக்க வேண்டும். திறந்த வெளியில் நீண்ட பத்திக்குச்சியின் மூலம் நின்றவாறே பட்டாசுகளை கொளுத்த வேண்டும்.

பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களின் கண்காணிப்பு இல்லாமல் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கக் கூடாது. பட்டாசுகளை சட்டை மற்றும் பேண்ட் பாக்கெட்டுகளில் போடுவதை தவிர்க்கவும். பட்டாசுகளை வெடிக்கும் போது காலணிகளை அணிவதுடன், உடலோடு ஒட்டிய பருத்தி ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும்.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டாம். வெடிக்காத பட்டாசுகளை கைகளில் எடுப்பதை தவிர்க்கவும். வீட்டுக்குள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. பட்டாசுகளை குவியல் குவியலாக வைத்தோ அல்லது ஒரு பட்டாசை மற்றொரு பட்டாசுடன் இணைத்து வைத்தோ வெடிக்கக் கூடாது.

விளம்பரத்திற்காக பட்டாசுகளை கைகளில் பிடித்தோ, தூக்கி வீசியோ, பாட்டில்கள், தேங்காய் சிரட்டை உள்ளிட்ட பொருட்களை குப்புறப்படுக்க வைத்தோ வெடிக்கக் கூடாது. குறிப்பாக, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்யலாம் :

பட்டாசு வெடிக்கும் போது காயம் ஏதேனும் ஏற்பட்டால், அந்தப் பகுதியை உடனடியாக குழாய் நீரில் படுமாறு காண்பிக்க வேண்டும். ஒருபோதும் தேய்க்கக் கூடாது. தீக்காயத்தின் மீது இங்க் மற்றும் மை போன்றவற்றை தடவக் கூடாது. காயத்தின் தன்மைக்கு ஏற்ப மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
தீக்காயத்தின் மேல கொப்புளம் ஏற்பட்டால் அதை உடைக்காமல் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். காயம் ஆற ஆற அந்த கொப்புளத்தின் உள் இருக்கும் நீர் வற்றி, மேல் தோல் உதிர்ந்து விடும்.

பட்டாசு புகையினால் கண் எரிச்சல் :

பட்டாசின் சிறு துணுக்குகள் கண்களில் படுவதோ, பட்டாசு புகையினால் கண் சிவந்து விடுதல், கண்ணில் நீர் வடிதல், எரிச்சல் போன்றவை ஏற்படலாம். கண்களை உடனடியாக சுத்தமான நீரினால் நன்கு கழுவ வேண்டும். கண்களில் எரிச்சல் போக்கக்கூடிய சொட்டு மருந்தை போடவேண்டும். உறுத்தலோ, நீர் வடிதலோ தொடர்ந்து இருந்தால், கண் மருத்துவரிடம் உடனடியாக பரிசோதிக்க வேண்டும்.

குறிப்பாக, ஒவ்வொரு முறை பட்டாசுகளை வெடித்து விட்டு பிற பொருட்களை தொடுவதற்கு முன்பாகவே, ஏதேனும் உணவுகளை உட்கொள்வதற்கு முன்னதாகவோ கைகளை சோப்பு போட்டு கைகழுவ வேண்டும். சானிடைசர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.