நீண்ட நேரம் அமர்ந்துவிட்டு எழுந்தால் “கிர்ர்” என சுற்றுகிறதா..?
ஓரிடத்தில் அமர்ந்துவிட்டு சட்டென எழும்போது தலை சில நொடிகள் சுற்றுவது போல் இருக்கும். அவ்வாறு இருந்தால் அவர்களுக்கு டிமென்ஷியா என்ற முதுமையில் ஞாபக மறதி நோய் வரலாம் என்று ஆய்வு கூறுகிறது. American Academy of Neurology வெளியிட்டுள்ள இந்த ஆய்வில் இந்த நிலைக்கு உடல் அழுத்தக்குறை என்று கூறுகின்றனர். அதாவது திடீரென இரத்த அழுத்தம் குறைந்து ஏறுமாம்.
அப்படி தலை சுற்றுவோருக்கு சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் இருக்கலாம் என்கின்றனர். அதாவது இந்த சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் என்பது இரத்த அழுத்தத்தின் முதன் நிலை என்கின்றனர். இது 15 mmHg அளவு குறையுமாம். அப்படி நீங்கள் அமர்ந்து எழும்போது குறையும் 15 mmHg அளவு என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்கின்றனர்.
அவ்வாறு 72 வயதுக்கு உட்பட்ட 2,131 பேரிடம் ஆய்வுக்காக பதிவு செய்யப்பட்ட போது டைமென்ஷியா இல்லாமல் இருந்துள்ளது. பின் 5 வருடங்கள் கண்காணித்து ஆய்வு செய்ததில்அவர்களில் 15% பேருக்கு உடல் அழுத்தக்குறை இருந்துள்ளது. 9% பேருக்கு சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் இருந்துள்ளது.
பின் 12 வருடங்கள் கழித்து ஆய்வு செய்த போது 462 பேருக்கு டைமன்ஷியா உருவாகியுள்ளது. அதில் சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் உறுதி செய்யப்பட்ட 40% பேருக்கு டிமென்ஷியா தீவிமடைந்திருந்தது. அதோடு அவர்களுக்கு சர்க்கரை நோய் , மதுப்பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் 37% கூடுதலாக அதிகரித்துள்ளது.