விளையாட்டு

“நம்பர் செவன் ஜெர்சிக்கும் ஓய்வளிக்க வேண்டும்” – ரசிகர்கள் கோரிக்கை

நம்மூர் தெருக்களில் ஆடும் பொடிசுகள் கூட தங்களுக்குப் பிடித்த வீரர்களின் ஜெர்சியை உடுத்தி வலம் வருகின்றனர். கிரிக்கெட் ரசிகர்கள் சாதனைகள் பல படைத்த சச்சின் டெண்டுல்கரின் நம்பர் 10 ஜெர்சியை அதிகம் அணிகின்றனர். இதுபோல் கால்பந்தில் காவியம் படைத்த அர்ஜென்டினாவின் மரடோனாவும் நம்பர் 10 ஜெர்சியை அணிந்தே ஆடினார். அவ்வகையில் உலகில் அதிகம் அணியப்படும் ஜெர்சியாக நம்பர் 10 விளங்குகிறது. 2017ல் சச்சின் ஓய்வுபெற்ற பிறகு அறிமுக வீரர் ஷர்துல் தாகூர், நம்பர் டென் ஜெர்சியை அணிந்தபோது ரசிகர்கள் கொதித்தெழுந்துதனர். அதனால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத வகையில் நம்பர் 10 ஜெர்சிக்கு பிசிசிஐ நிரந்தர ஓய்வு அளித்து கவுரவித்தது.

இந்நிலையில் சுதந்திர தினத்தன்று தன் ஓய்வு முடிவை தோனி அறிவித்ததைக். கேட்டு கிரிக்கெட் உலகமே அதிர்ந்தது. கிரிக்கெட் அறியாதவரையும் கிரிக்கெட் பார்க்க வைத்தவரும், இந்திய அணியை பல சாதனை சிகரங்களுக்கு இட்டுச் சென்றவருமான தோனியை கவுரவிக்கும் விதமாக அவர் அணிந்த ஜெர்சி நம்பர் செவனுக்கும் நிரந்தர ஓய்வு அளிக்கவேண்டும் என பரவலாக குரல் எழுந்துள்ளது .

இதை முதன்முதலில் எழுப்பியவர் வேறு .யாருமல்ல. தோனியின் வரவால் விக்கெட் கீப்பிங் வாய்ப்பை நிரந்தரமாக இழந்த நம்மூர் தினேஷ் கார்த்திக்தான். தோனியுடன் தான் இடம்பெற்றிருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டு, ஜெர்சி செவனுக்கும் ஓய்வு அளிக்கப்படும் என நம்புவதாக குறிப்பிட்டிருந்தார். தேசிய அணியின் ஜெர்சியை அணிவது ஒவ்வொரு வீரரின் கனவு. ஆனால் மனம் கவர்ந்த நாயகர்கள் அணிந்த ஜெர்சியை யாரும் அணியக் கூடாது என ரசிகர்கள் விரும்புவது, கவுரங்களுக்கெல்லாம் சிகரம். மும்பையில் பிறந்தசரித்திர நாயகன் சச்சினுக்கு கிடைத்த கவுரவம் சாதாரண பின்னணியில் உதித்து ஜொலித்த “தல” தோனிக்கும் கிடைக்கவேண்டும் என்பதே உலகெங்கும் உள்ள ரசிகர்களின் விருப்பம்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.