தோனியின் உலக சாதனையை முறியடித்த இங்கிலாந்து கேப்டன்.
கேப்டனாக மகேந்திர சிங் தோனி நிகழ்த்திய இமாலய சாதனையை குறைந்த போட்டிகளிலேயே இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முறியடித்துள்ளார். சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக அதிக சிக்சர்கள் (211) விளாசியவர் பட்டியலில் மகேந்திர சிங் தோனி முதலிடத்தில் இருந்தார். தற்போது அந்த சாதனையை இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் முறியடித்துள்ளார்.
மகேந்திர சிங் தோனி கேப்டனாக 332 போட்டிகளில் 211 சிக்சர்கள் அடித்திருந்தார். இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் அந்த சாதனையை 163 போட்டிகளில் 212 சிக்கசர்கள் அடித்து முறியடித்துள்ளார். தோனியை விட பாதிக்கும் குறைந்த அளவிலான போட்டிகளில் இயான் மோர்கன் இந்த சாதனையை முறியடித்துள்ளார். அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சதமடித்த மோர்கன் தோனியின் சாதனையும் முறியடித்துள்ளார். அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளில் தோனி 359 சிக்சரும், மோர்கன் 328 சிக்சரும் அடித்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் 171 சிக்சர்களுடன் 3வது இடத்திலும், நியூசிலாந்து அணியின் மெக்கலம் 170 சிக்சர்களுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.