தேர்வே இல்லாமல் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அளிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்!
அடுத்த சில மாதங்களில் லட்சக்கணக்கில் நோய்த்தொற்று அதிகரிக்கும் என்று அரசே எச்சரித்துள்ள நிலையில் தேர்வுகள் சாத்தியமல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு வரும் 15-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என, பல அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றமும் கருத்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூன் 9) தன் ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பில் தேர்வு இல்லாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்க வேண்டும். 11 ஆம் வகுப்பில் ஒரு தேர்வு எழுதாத அனைத்து மாணவர்களுக்கும், 12 ஆம் வகுப்பில் ஒரு தேர்வை எழுதாத 35 ஆயிரம் மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்க வேண்டும்!
அடுத்த சில மாதங்களில் லட்சக்கணக்கில் நோய்த்தொற்று அதிகரிக்கும் என்று அரசே எச்சரித்துள்ள நிலையில் தேர்வுகள் சாத்தியமல்ல. எனவே, மாணவர்கள் நலன் கருதி முதல்வர் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பில் தேர்வு இல்லாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்க வேண்டும். 11-ஆம் வகுப்பில் ஒரு தேர்வு எழுதாத அனைத்து மாணவர்களுக்கும், 12-ஆம் வகுப்பில் ஒரு தேர்வை எழுதாத 35,000 மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்க வேண்டும்! #Cancel10thPUBLICEXAM
— Dr S RAMADOSS (@drramadoss) June 9, 2020