கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சன்ங்களை முன்வைத்து வருகின்றனர். இதற்கு அதிமுகவினர் தரப்பில் ஊடகங்களின் வாயிலாக பதிலளிப்பதும் தொடர்ந்து வருகிறது.
மார்ச் மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பழைய மின்சார கட்டணங்களையே செலுத்துமாறு அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து தற்போது கணக்கெடுக்கப்படும் மின்சார ரீடிங்கின் படி அதிக தொகை செலுத்தும் நிலை உருவாகியிருப்பதாக பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் பிரசன்னா இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:-
“இந்த கோவிட் ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்பதை எத்தனை பேர் உணர்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
How many of you feel #TNEB is on a looting spree amidst this COVID lockdown?
— Prasanna (@Prasanna_actor) June 2, 2020