அங்கோர் வாட் ,கம்போடியாவின் மிகவும் பிரபலமான பண்டைய கோயில் தளம் ஆகும். இந்த இடத்தை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் என்றும் , ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய தொழில் நகரமாகவும் இதனை குறிப்பிடுகின்றனர். கம்போடியாவின் தேசியக் கொடியில் அங்கோர் வாட் காணப்படுகிறது. அனைத்து எகிப்திய பிரமிடுகளையும் விட அதிகமான கற்களை பயன்படுத்தி கட்டப்பட்டது அங்கோர் நகரம். இந்த கோயில்தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது. இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இவ்வாறு பல சிறப்புகளை அடுக்கி கொண்டு போகும் இந்த அங்கோர் வாட், 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இரண்டாம் சூரியவர்மன் இன்னும் தமிழ் மன்னரால் கட்டப்பட்டது என்பது தமிழர்களுக்கு மிகவும் சிலிர்ப்பூட்டும் ஒரு செய்தி ஆகும்.
அங்கோர் என்றால் நகரம் என்றும், வாட் என்றால் கோயில் என்றும் பொருள். வாட் என்றால் மேரு மலையின் குறியீடு என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். அங்கோர்வாட் கோயிலைச் சுற்றியுள்ள அகழி மேரு மலையை சுற்றியுள்ள பெருங்கடலை குறிக்கும். கோவிலின் மூன்று அடுக்குகளும் மேருவை தாங்கும் நீர்,நிலம்,காற்று ஆகிய தளங்கள். இங்குள்ள 5 கோபுரங்கள் மேரு மலையின் உயர்ந்த 5 சிகரங்களைக் குறிக்கிறது என தெரிவிக்கின்றனர். ஆயுதமேந்திய எட்டு விஷ்ணுவை மூல கடவுளாக கொண்டு இது கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. , இவை அனைத்தும் இந்த கோவிலின் இந்தியா பின்னணியை சிறப்புற வெளிப்படுத்துகிறது.
அங்கோர் வாட் கோயிலில் குருஷேத்திரப்போர் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. யுத்தக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே நடக்கும்போது புடைப்புச் சிற்பங்களில் வடிக்கப்பட்டுள்ள அந்தப் பதினெட்டு நாள் நிகழ்ச்சிகளும் நம் கண்முன்னே ஒன்றன் பின் ஒன்றாக ரதங்கள் போன்று நகர்கின்றன.
அங்கோர்வாட் கோயிலின் கிழக்கு சுற்றில் தேவர்களும், அசுரர்களும் சமுத்திரத்தை கடைந்து அமுதம் எடுத்ததை சொல்லும் அந்த பாகவதப் புராண கதை. இது கதையல்ல, தமிழர்களின் அறிவியல்.
இரண்டாம் சூர்யவர்மன் இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயல்பட்டது. இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்.. இன்றைக்கு இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
12 ஆம் நூற்றாண்டின் இறுதியில், அங்கோர் வாட் படிப்படியாக இந்து வழிபாட்டு முறையில் இருந்து புத்த மதத்திற்கு மாறியது, அதுவே இன்றுவரை தொடர்கிறது. அங்கோர் வாட் ஒரு புத்த மத ஆலயமாக மாறியது, மேலும் அங்கு இருந்த பல இந்து தெய்வங்களின் சிலைகளும் புத்த சிலைகளாக மற்ற பட்டது.
அங்கோர் வாட் கோயிலை இரண்டாம் சூர்யவர்மன் முழுவதுமாகக் கட்டி முடிக்கவில்லை. எட்டாம் ஜெயவர்மன் காலத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான் அது நிறைவுசெய்யப்பட்டது.இவ்வாறு உலகமே வியந்து பார்க்கும் வகையில் தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில் கடல் கடந்து பிரமாண்டமாக நிற்கிறது.