தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு…

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. ஆகஸ்ட் 31-ம்ம் தேதிவரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளநிலையில், ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமையன்று காய்கறி, மளிகை கடை, இறைச்சிக்கடைகளும் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருந்துக்கடைகள், மருத்துவமனைகள் நாளை வழக்கம்போல செயல்படும். பால்கடைகளுக்கு காலை நேரத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.