செமஸ்டர் இருக்கா? இல்லையா? அமைச்சர் அன்பழகன் கூறுவது என்ன?
சீனாவில் இருந்து பரவிய கொரோனா பல்வேறு நாடுகள்இல் பாதிப்பை ஏற்படுடுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் 5 ஆம் கட்டமாக சில தளர்வுகளுடம் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரரவிட்டது. இதேபோல் கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்படுமா என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இதுகுறித்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது :
முதல்வருடன் ஆலோசித்து கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பல கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதால் தற்போதைக்கு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.