சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தேர்வுகளை நடத்துகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வும் செப்டம்பர் மாதத்தில் பிரதான தேர்வும் அதில் தேர்வானவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் நேர்முகத்தேர்வு நடைபெற்றது. இடையில் கொரோனா பரவல் காரணமாக நேர்முகத்தேர்வுகள் நடைபெறவில்லை, இந்த நிலையில் கடந்த வாரம் நேர்முகத்தேர்வு நடத்தப்படாத நபர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இறுதித்தேர்வில் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இவர்களுள் 180 பேர் ஐ.ஏ.எஸ் பணியிடங்களையும் 150 பேர் வெளியுறவு துறை பணியிடங்களையும் (IFS) 24 பேர் ஐ.பி.எஸ் பணியிடங்களையும் தேர்வு செய்துள்ளனர். தமிழகத்தில் இருந்து 44-க்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாகர்கோவிலை சேர்ந்த கணேஷ்குமார் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், பார்வைக்குறைபாடு உடைய இருவர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மதுரையை சேர்ந்த பூர்ண சுந்தரி மற்றும் நாகையை சேர்ந்த பாலா நாகேந்திரன் ஆகிய இருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.