
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் சென்னை மண்டலம் ம்,மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் சென்னை மண்டலம் ம்,மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. சிபிஎஸ்இ-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான http://cbseresults.nic.in. என்ற தளத்தில் மாணவர்கள் முடிவுகளைக் காணலாம்.தேர்வு முடிவுகளின்படி, இந்தியாவில் 88.78 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்த தேர்ச்சி விகிதம் 83.40 சதவிகிதமாக உள்ளது. எனவே, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 5.38% அதிகம் பதிவாகியுள்ளது.
ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தில் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு 97.67% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து பெங்களூரு இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. இங்கு 97.05% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மூன்றாவது இடத்தை சென்னை மண்டலம் பிடித்துள்ளது. சென்னை மண்டலத்தில் 96.17% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



