உணவுகள்
சின்ன வெங்காய தொக்கு – செய்வது எப்படி..?
சின்ன வெங்காயம் உடலுக்கு நல்லது. அதேசமயம் முடி வளர்ச்சிக்கும் நல்லது. எளிமையான முறையில் சின்ன வெங்காய தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம். காய்ந்த மிளகாயை முதலில் மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள். பின் பூண்டு, சின்ன வெங்காயத்தை சேர்த்து அரையுங்கள்.
அடுத்ததாக தக்காளி, உப்பு, புளி சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள். பின் அதை தனியாக வழித்து எடுத்துக்கொள்ளுங்கள். கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து பொறிந்ததும் அரைத்த சட்னியை சேர்த்து வதக்கி எண்ணெய் சற்று பிரிந்து வரும் வரை கொதிக்க விடுங்கள். சுருங்கி எண்ணெய் கொதித்து மேலே வரும்போது அடுப்பை அனைத்துவிடுங்கள். அவ்வளவுதான் சின்ன வெங்காய தொக்கு தயார்.