சார்ஸ் வைரஸுக்கு கைகொடுக்காத மருந்து கொரோனாவுக்கு கைகொடுக்கும் ஆச்சரியம்…
நோய் எதிர்ப்புச் சக்தி கோவிட்19 வைரசின் தாக்குதலுக்குப் பிறகு எவ்வாறு தகவமைத்துக்கொள்கிறது என்பதைப் பொறுத்தே தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சிகள் அமையும் அதனால் நோய் எதிர்ப்புச் சக்தி குறித்த ஆய்வுகள் மருத்துவ உலகில் மேற்கொள்ளும் ஆய்வுகளில் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆய்வுகளின் படி சில சாதாரண காய்ச்சலை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற வைரஸ் தாக்கிய நபர்களிடம் கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தி ஏற்கனவே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளைக் குறித்த மேலும் விபரங்களுக்கு இந்த லிங்கை சொடுக்குங்கள்.
1960களில் தாக்கிய ஈரல் அழற்சி பறை (ஹெபடைடிஸ்) நோயைக் குணப்படுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டி வைரஸ் மருந்தின் பெயர் ரெமிடெஸிவிர். இந்த மருந்தை சார்ஸ், மார்ஸ் போன்ற தொற்று நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்த முற்பட்டபோது போதுமான விளைவுகள் ஏற்படவில்லை. ஆனால் ஆச்சரியப்படுத்தும் வகையில் இதே நோய் குடும்பத்தில் வந்த கொரோனாவுக்கு எதிராக விளைவுகளைக் காட்டுவதாக இந்த ஆய்வுக் குறிப்பிடுகிறது.