ஈரோட் மாவட்டம் இன்று மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அனைவரையும் முழுமையாக அனுப்பியுள்ளது:-
மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 பேரில் 69 பேர் குணமடைந்தனர். ஒருவர் மட்டும் மரணம் அடைந்தனர்.அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மாவட்ட நிர்வாகத்துடன் கைகோர்த்து கடைசி 4 நபர்களையும் தங்கள் வீடுகளுக்கு அனுப்பினர். இதனால் இன்று ஈரோடு மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி கடைசியாக புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்தது.ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்கள். கடந்த 22ம் தேதி 65 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பினர். இதற்கிடையில் முதியவர் ஒருவர் மட்டும் உயிரிழந்தார். மீதமுள்ள 4 பேர் மட்டும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்கள். அதன்பின்னர் கடந்த 14 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஈரோடு மாவட்டத்தில் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 பேரும் குணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் ஈரோடு மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட முதல் மாவட்டம் என்ற சாதனையை ஈரோடு படைத்துள்ளது என்று ஈரோடு மாவட்டம் எஸ்.பி திரு.S. சக்தி கணேசன், I.P.S தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா இல்லாத மாவட்டத்தின் வரிசையில் ஈரோடும் இணைந்துள்ளது. விரைவில் பல மாவட்டங்கள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் குணம் அடைவோர் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது.