கொரோனா பகுதியில் உள்ள மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் அனுமதி இல்லை…
தேர்வு நடத்தும்போது கொரோனா பரவாமல் தடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொருவரும் ஆறு அடி இடைவெளி விட்டு அமரவேண்டும் எனவும், முகக்கவசம் அல்லது ஃபேஸ் கவர்கள் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள தேர்வு மையங்கள் மட்டுமே செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு, கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வரும் ஊழியர்கள், மாணவர்களை தேர்வு மையங்களில் அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
அனுமதிக்கப்படாத மாணவர்களுக்கு மாற்று வழியில் தேர்வு நடத்துவதற்கு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் பரிசீலனை செய்யவேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அதிகாரி மனிஷா வர்மா, இந்த நெறிமுறைகள் நீட் தேர்வுக்கும் பொருந்தும் என்றார்.இதனால் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்துவரும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு செல்லமுடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.