கொரோனா நிவாரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு உதவிகள் மக்களுக்கு செய்யப்படுகின்றன. அந்த வகையில் ரேஷன் அரிசியும் வழங்கப்படுகிறது. ஆனால் அரசு வழங்கும் ரேஷன் அரிசு தரமாக இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருப்பூர் மாவட்டம்:-
திருப்பூர் மாவட்டம், பல்லடம், பாரதிபுரம் பகுதி, நோய் தொற்று அபாயம் காரணமாக, ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், அதிகாரிகள், தங்களை புறக்கணிப்பதாக கூறி, நேற்று முன்தினம், ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர்.
பாரதிபுரம் பகுதி மக்களுக்கு, நிவாரண பொருட்களை வழங்கிச் சென்றார். எம்.எல்.ஏ., சென்றவுடன், பொதுமக்கள், மீண்டும் அவற்றை திருப்பி கொண்டு வந்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
தரம் குறைந்த அரிசியை கொடுத்து தங்களை ஏமாற்றி விட்டதாகவும், இந்த அரிசியை கொடுப்பதற்கு, இத்தனை பேர் வர வேண்டிய அவசியம் இல்லை எனவும் பொதுமக்கள் கூறினர். அதனைத் தொடர்ந்து, நகராட்சியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள், வீடு வீடாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.