கொரோனோ பீர் கம்பெனி ,கொரோனோ என்கிற வார்த்தையை இணையத்தில் மாற்றினால் இந்திய மதிப்பில் 70 கோடி ரூபாய் தருவதாக அறிவித்திருப்பது ,இணைய வாசிகளை குஷிப்படுத்தியிருக்கிறது.
உலகம் முழுதும் உள்ள மக்கள் எப்போது மிகவும் வெறுக்கும் ஓரே பெயர் “கொரோனா”.இவ்வாறு மக்கள் மத்தியில் எதிர்மறை அதிர்வலையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.இந்த நிலையில் ஐரோப்பிய நாட்டில் உள்ள பிரபல பீர் கம்பெனியின் டிரேடு மார்க் பெயரும் கொரோனோ தான். உலகத்தில் உள்ளவர்கள் தினந்தோறும் கொரோனோ வைரஸ் என்கிற வார்த்தையை கூகுள் இணையத்தில் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.அப்படி தேடும் போது கொரொனோ வைரஸ் ,பீர் இந்த இரண்டும் இணைத்தில் காட்டுகிறது. இதனால் கொரொனோ பற்றி தேடும் இணைய வாசிகளுக்கு ஒரே குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
ஐரோப்பாவில் உள்ள ஒரு பீர் கம்பெனியின் பெயரும் கொரோனா தான். கொரோனோ வைரஸ் கொடுமைகளை பற்றி படிப்பவர்கள், கொரொனோ பீர் பற்றியும் படித்து வருகிறார்கள். இதனால் கொரொனோ வைரஸ்க்கும் ,பீருக்கும் முடிச்சு போட்டு இதை குடித்தால் கொரொனோ தாக்கும் என்று வதந்தியை பரப்பி வருகிறார்கள். இதனால் அந்த நிறுவனம் தனது பீர் விற்பனையில் பெரும் அளவில் சரிவை சந்தித்து உள்ளது.
கொரோனா என்பது வைரஸ்ஸா அல்லது பீரா? என்ற குழப்பம் நெட்டிசன்கள் இடையே இருந்து வருகிறது. எதார்த்தமாக கொரோனோ என்கிற பெயர் அமைந்தாலும் கொரோனோ வைரஸ், கொரோனோ பீரையும் விட்டு வைக்கவில்லை, அதையும் தாக்கி அதன் விற்பனையையும் முடக்கி உள்ளது. இதனால் அந்த நிறுவனம் தனது கொரொனோ பீர் விற்பனை குறைந்துள்ளதாகவும், கொரொனோ என்கிற பெயரால் தனது பிராண்ட் பீர் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வருத்தம் அடைந்துள்ளது.
இது குறித்து கொரோனோ பீர் கம்பெனி வெளியிட்டுள்ள அறிக்கையில்..” எங்கள் கம்பெனி கொரோனோ பீர்க்கும், வைரஸ் கொரொனோவுக்கும் சம்மந்தம் இல்லை. கொரொனோ பெயரை மாற்றினால் இந்திய மதிப்பில் 70 கோடி ரூபாய் தருவதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது.
கிழக்கு ஐரோப்பிய நாடான எஸ்டோனியா தான் “கொரோனா பீர் வைரஸ்” என்ற வார்த்தையை அதிகம் தேடிய நாடாகவும் விளங்குகிறது. ஃபாக்ஸ்’ செய்தி நிறுவனம் அண்மையில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கூகுள் ட்ரெண்ட்ஸ் அளித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் கடந்த சில நாட்களாக “கொரோனா பீர் வைரஸ்” என்ற வார்த்தை அதிக முறை தேடப்பட்டுள்ளதாக குறிபிடப்பட்டுள்ளது.