வாஷிங்டன் : அமெரிக்காவில் கொரோனாவைத் தொடர்ந்து சிறு குழந்தைகளை மர்ம நோய் தாக்கி வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவின் பாதிப்பே இன்றும் அடங்காத நிலையில், அமெரிக்காவில் 2 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மர்ம நோய் பரவுகிறது. ஒருவகை அழற்சியால் பாதிக்கப்பட்ட ஏராளமான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோய்த் தொற்று கவாசாகி(Kawasaki) என்ற நோய் அறிகுறியுடன் ஒத்திருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல், வாந்தி, சொறி, வீங்கிய நிணநீர் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்தஅறிகுறிகள் தெரிந்தால் குழந்தைகளை உடனடியாக மருத்துவமனையில் வந்து அனுமதிக்குமாறு நியூயார் நகர மேயர் Bill de Blasio தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோய் அறிகுறி தெரிந்தவுடன் மருத்தவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் நியூயார்க் நகர சுதாரத்துறை ஆணையர் Oxiris Barbot தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பு
கடந்த வாரம் ஒரு செய்தி மாநாட்டில்,”சில ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளிடம் சில அரிய அழற்சி நோய்க்குறிகள் காணப்படுகின்றன, இது கவாசாகி நோய்க்குறியைப் போன்றது, ஆனால் இது மிகவும் அரிதாகவே தோன்றுகிறது” என்று உலக சுகாதார அமைப்பு ( WHO ) விஞ்ஞானி டாக்டர் மரியா வான் கெர்கோவ் கூறினார்.