கனடா: குடும்ப வன்முறை அதிகரிப்பு… கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக அண்மைய புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த ஏப்ரல் மாதத்தில் வன்முறை பற்றிய 42 புகார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக, காம்ப்பெல் ரிவர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பெறப்பட்ட அழைப்புகளின் இரு மடங்காகும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மொத்தம் 23 புகார்களில் 19 குடும்ப வன்முறை புகார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம், அனைத்து குடும்ப வன்முறை அழைப்புகளிலும் சுமார் 41 சதவீதத்திற்கு மது அல்லது போதைப்பொருள் ஒரு காரணியாக இருந்தது என்று பொலிஸார் கூறுகின்றனர்.இப்போது சமூக உறுப்பினர்கள் நிதானமாக இல்லாதபோது மோதல்களை தவிர்க்க முயற்சிக்க வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்துகின்றனர்.