உலகம்

காரில் வலம் வந்த “டிரம்ப்”…!

கொரோனா தொற்று காரணமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிபர் டிரம்ப்க்கு மூச்சு விடுதலில் பிரச்னை எழுந்ததால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். டிரம்புக்கு ரெம்டெசிவர் 2வது டோஸும், டெக்ஸாமெத்தசோன் முதல் டோஸும் அளிக்கப்பட்டது. இதனால் பக்கவிளைவு எதுவும் தென்படவில்லை என்று அவருக்கு சிகிச்சையளித்து வரும் நுரையீரல் நிபுணர் தெரிவித்திருக்கிறார். டிரம்பின் உடல்நிலை நன்றாக இருப்பதால், அவர் இன்று வெள்ளை மாளிகைக்கு திரும்பக் கூடும் எனவும், அதன்பின் சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்படும் என்றும் சிறப்பு மருத்துவர் கோன்லி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மருத்துவமனை முன் கூடியிருந்த தனது ஆதரவாளர்களை காண அதிபர் டிரம்ப் திடீரென காரில் புறப்பட்டுச் சென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பெரும்பாலும் முதியோரைத்தான் அதிகமாக பாதிப்புக்குள்ளாக்குவதால், 74 வயதாகும் ட்ரம்புக்கு இது சவாலான தருணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.