காஞ்சிபுரத்தில் முகக்கவசம் அணியாமல் வந்தால் ரூ.100 அபராதம்: நகராட்சி ஆணையாளர் ரா. மகேஸ்வரி உத்தரவு
காஞ்சிபுரத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவி வருவதால் நகரில் சின்ன காஞ்சிபுரம் சன்னதி தெரு, ரெங்கசாமி குலம், தேரடி, மூங்கில் மண்டப சந்திப்பு, ரெட்டை மண்டபம் உள்பட 14 இடங்களில் நகராட்சி சுகாதார அலுவலர்கள் தலைமையில் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் ஆகியோர் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என சோதிக்கப்பட்டு வருகின்றனர்.
முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் உடனடி அபராதத் தொகையாக ரூபாய் 100 வசூலிக்கப்படுகிறது. இதுவரை 1500 பேரிடம் ரூபாய் 100 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்த அபராதத் தொகை ரூபாய் 15,000 வசூலிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகரில் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுமென நகராட்சி ஆணையாளர் ரா. மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.