கழிவுகள் மெரினா கடற்கரையில் கலக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்…
மெரினா கடற்கரையில் கழிவுகள் கலக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.கடந்த டிசம்பரில் மெரினாவில் அதிக அளவில் நுரை ஏற்பட்டது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் நிபுணர்கள் குழு கடந்த பிப்ரவரி மாதம் அறிக்கை தாக்கல் செய்திருந்த்து.
அதில், நெசப்பாக்கத்தில் உள்ள பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் உள்ளிட்ட காரணங்களால்தான் நுரை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் இறுதி உத்தரவை பிறப்பித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், மெரினாவில் கழிவுநீர் எங்கிருந்து கலக்கிறது என்பதைக் கண்டறிந்து, மாசு ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.