உலகம்தகவல்கள்

கொரோனவில் இருந்து மீண்டு வந்த பிரிட்டிஷ் பிரதமக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது…

போரிஸ் ஜான்சனுக்கும், அவரது காதலியும், வருங்கால மனைவியுமான கேரி சைமண்ட்ஸ் தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார். லண்டனில் உள்ள மருத்துவமனையில் தாயும், சேயும் நலமுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

  • ஜான்சனுக்கு முன்னாள் மனைவி மெரினா வீலருடன் நான்கு குழந்தைகள் உள்ளனர், அவர்கள் 2018 இல் பிரிந்த பின்னர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் விவாகரத்து செய்தனர்.
  • கலை ஆலோசகர் ஹெலன் மெக்கின்டைருடன் பிரதமரின் ஐந்தாவது குழந்தை பிறந்தது.
  • போரிஸ் ஜான்சனுக்கு இப்போது 5 முதல் 7 குழந்தைகள் உள்ளது என பிரிட்டிஷ் ஊகங்கள் கூறிவருகிறது.
  • ஆனால் தனக்கு எத்தனை குழந்தைகள் உள்ளது என்பதற்கான பதிலை போரிஸ் அவர்கள் கூறாமல் மறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப்பிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சுமார் ஒரு மாத காலம் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்றார். தொடர்ந்து, கரோனாவில் இருந்து மீண்டு வந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை பிரதமர் அலுவலகத்துக்குத் திரும்பினார்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பலி எண்ணிக்கை கொண்ட நாடுகளில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக பிரிட்டன் 5-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.