தமிழகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் தேவை அதிகம் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் அதிகமாக பரவி வருவதால் தடுப்பு பணிக்காக 2,323 செவிலியர்கள் ஏற்கனவே பணியமர்த்தப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து 6 மாத காலங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் 2,570 செவிலியர்களை பணியமர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. செவிலியர்கள் ஆணை கிடைக்கப்பெற்ற மூன்று தினங்களுக்குள் பணியில் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 40 செவிலியர்களும், தாலுக்கா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியர்களுக்கும் பணியமர்த்தப்படுவார்கள்.
இதன் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் மேலும் வலுவடையும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.