கடுகடுவென இருக்கும் பாஸுடன் போராட்டமா? இதை செய்யுங்க போதும்…
உயரதிகாரி என்றாலே அவர் எப்போதும் சீரியஸான ஒரு நபராகத்தான் இருக்க முடியும். ஆனால் எல்லா நேரங்களிலுமே கடுகடுவென இருக்கும் பாஸை சமாளிப்பதே அலுவலகப் பணியைக் காட்டிலும் பெரிய சிக்கல். அப்படிப்பட்ட பாஸை நீங்களும் தினம் தினம் சம்மாளிக்கிறீர்கள் எனில் உங்களுக்கான டிப்ஸ்தான் இவை. எல்லா நேரங்களிலும் நீங்கள் ஃபுரபஷ்னலாக நடந்துகொள்வது போல் இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் இதை பின்பற்றுங்கள். சிக்கலான சூழ்நிலைகளை சமாளிக்க உங்களுக்கென மூத்த அனுபவசாலிகளுடன் பழக்கம் வைத்துக்கொள்ளுங்கள். தவறுகள் நடக்காமல் இருக்க எப்போதும் அவர்களின் அறிவுரையை நாடுங்கள்.
புராஜெக்டில் எந்த தடை, தவறு நேர்ந்தாலும் அதை உடனுக்குடன் பாஸிடம் தெரியப்படுத்துங்கள். முடிந்தால் மூத்த அனுபவசாலி என்ற முறையில் அவரிடமே உதவி கேட்கலாம். மறைத்து சமாளிக்க நினைத்து இறுதி நாளில் கெட்டப் பெயர் வாங்காதீர்கள். ஸ்மார்ட்டாக தப்பிக்க இதுவே சிறந்த வழி. புரமோஷன்களுக்கான வாய்ப்புகள் வரும்போது அதை சட்டென நழுவ விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். இதனால் பாஸிடம் நல்ல அபிப்ராயம் கிடைக்கும். உங்கள் மீதான குற்றச்சாட்டு , தவறுகளின் எண்ணிக்கைகளை உயர விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.