“ஏடிஎம்” இயந்திரத்தை தொடாமல் பணம் எடுக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளன.!!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஏடிஎம் இயந்திரத்தை தொடாமல் பணம் எடுக்கும் வசதி விரைவில் அமலுக்கு வர உள்ளது. அதாவது, வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள செல்போனில் வங்கிகளின் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் ஏடிஎம் மையத்திற்கு சென்று திரையில் காட்டும் QR கோடினை, மொபைல் செயலியில் ஸ்கேன் செய்வதன் மூலம் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். எடுக்க வேண்டிய தொகை எவ்வளவு என்பதை மொபைல் ஆப்பில் பதிவு செய்தால், அந்த தொகை ஏடிஎம் இயந்திரத்தில் வரும். இதன்மூலம், ஏடிஎம் இயந்திரத்தை தொடாமல், பணத்தை மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.இந்த புதிய முறை மிகவும் பாதுகாப்பானது என்றும், விரைவாக பணத்தை எடுக்க இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தை தொடாமல் பணம் எடுக்கும் புதிய வசதி அமலுக்கு வர 8 வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.