2020 ஆம் ஆண்டு : இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து பல விசித்திரமான மற்றும் வினோதமான விஷயங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்த வகையில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சமைப்பதில் ஒரு பெரிய மீனுடன் பறவை பறக்கும் வீடியோ வைரல் ஆகிவருகிறது
பறவை ஒன்று வாயில் சுறா மீன் ஒன்றை கவ்வி கொண்டு கடற்கரையில் பறக்கும் வீடியோ வைரல் ஆகிவருகிறது
அமெரிக்காவின் மார்டில் கடற்கரையில் கடந்த வாரம் பறவை ஒன்று ஒரு ஷார்க் வகை மீனை வாயில் வாய்த்து கொண்டு பறக்கிறது . இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் மக்களை திகைக்க வைத்துள்ளது.
என்.டி.டி.வி அறிக்கையின்படி, இந்த காட்சி தென் கரோலினாவில் கெல்லி பர்பேஜ் என அடையாளம் காணப்பட்ட பேஸ்புக் பயனரால் கைப்பற்றப்பட்டது. அவர் ஒரு பொது பேஸ்புக் குழுவில் வீடியோவைப் பகிர்ந்து: “கழுகு? காண்டோர் பறவை? மார்டில் கடற்கரையில் ஒரு சுறாவை பறவைப் பிடித்தது!” இவ்வாறு கமெண்ட் செய்துள்ளார்.
சில நிமிடங்கள் கழித்து, அந்த வீடியோ ட்விட்டரில் மீண்டும் வெளியிடப்பட்டது, அங்கு இது 14.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் ஆயிரக்கணக்கான கருத்துகளையும் பெற்று உள்ளது.
இதற்கிடையில், ‘டிராக்கிங் சுறாக்கள்’ என்ற ட்விட்டர் கணக்கு அந்த பறவையையும் மீன்களையும் அடையாளம் காண பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது. “இது என்ன வகை பறவை என்று யாருக்கும் தெரியுமா, அது ஒரு சுறாவை வைத்திருக்கிறதா?” என்று தெரிவித்து உள்ளது.