பெண் காவலர் ரேவதிக்கு ஒரு மாதம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாக மதுரை தென்மண்டல ஐஜி முருகன் கூறி உள்ளார்.
மதுரை தென்மண்டல ஐஜியாக முருகன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது முருகன் கூறியதாவது:
லாக்கப் மரணம் என்பது தவிர்க்கப்பட வேண்டியது என்பதே காவல்துறையின் நிலைப்பாடு. சாத்தான்குள விவகாரம் குறித்து தற்போது கருத்து கூற முடியாது என்றார்.
பின்னர் தூத்துக்குடி சென்ற அவர் அங்கும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிபிசிஐடி போலீசாருக்கு உள்ளூர் போலீசார் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.
தொடர் பயிற்சியின் மூலம் லாக் அப் மரணங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும். ஊரடங்கு நேரத்தில் காவலர்கள் நண்பர்கள் குழு சரியாக செயல்படுவதை உறுதி செய்வோம். தொடர் பயிற்சியின் மூலமே சில விஷயங்களை மாற்ற முடியும்.
முதலமைச்சர் சாத்தான்குளம் வருவது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. காவலர்கள் நண்பர்கள் குழுவினர் வரம்பு மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்களுக்கு போதிய ஓய்வு தரப்படுகிறது.
காவல்நிலையங்களில் பதிவேடுகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்வோம். பெண் காவலர் ரேவதிக்கு ஒரு மாதம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரது கோரிக்கையின் படி, இதை செய்துள்ளோம் என்று கூறினார்.