உங்களின் ஒரு சிறிய பங்களிப்பு வறுமையில் வாடும் ‘சோடாவில்’ ஒரு முழு குடும்பத்திற்கும் உணவளிக்க முடியும்…!
ஜெய்ப்பூர்: ஒரு பக்கம், கொரோனா வைரஸ்.. இன்னொரு பக்கம் வெட்டுக்கிளி தாக்குதல்.. அத்துடன் அளவுகடந்த அனல்காற்று என மும்முனைத் தாக்குதலால் சிதறிப் போய் கிடக்கிறது வட இந்தியா. அதிலும் ராஜஸ்தான் மாநிலம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
‘சோடா’ என்று அழைக்கக் கூடிய ஒரு கிராமம் இதற்கு ஒரு உதாரணம். அங்குள்ள மக்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் படும் கஷ்டத்தை பார்க்க முடியாமல், சோடா கிராமத்தின் முன்னாள் சர்பஞ்ச், சாவி ராஜ்வத் ஒரு முயற்சியை முன்னெடுத்துள்ளார்.
நன்கொடைகளை திரட்டி அந்த மக்களுக்கு உணவு வசதிகள் செய்து கொடுப்பதுதான் அவரின் முன்முயற்சி.இதற்காக வெப்சைட் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் உள்ள 900 குடும்பத்தினருக்கு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ராஜ்வத்.
ராஜ்வத் அவர்கள் கூறுகையில், இப்போதைய சூழ்நிலையில் கிராமப்புற இந்தியா மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. கிராமப்புற மக்களுக்கு குறிப்பிடத்தக்க அளவுக்குத்தான் வருவாய் ஆதாரம் இருக்கிறது. இதற்கிடையே அனல் காற்றும், வெட்டுக்கிளி பிரச்சனையும், நோய் தொற்றும் சேர்ந்து அவர்களை வாழ வழியற்ற மக்களாக, மாற்றிக் கொண்டிருக்கிறது.
இந்த 900 குடும்பங்களுக்கும் மூன்று நேரம் சாப்பாடு கிடைப்பதற்கு குறைந்தபட்சம் மாதம் தலா 3,000 ரூபாய் தேவைப்படுகிறது. வரும் மாதங்களில் இன்னும் இவர்கள் நிலைமை மோசமாகும் என்பதால் கருணை உள்ளம் படைத்தவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று, இவர்கள் வாழ்வாதாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறேன்.
இப்படியான முயற்சியின் காரணமாக, இதுவரை 140 குடும்பங்கள், தத்தெடுக்கப்பட்டுள்ளது. நிதி உதவி பெறுவதற்காக www.villagesoda.org என்ற பெயரில் ஒரு இணையதளம் தொடங்கியுள்ளோம். அதில் நீங்கள் மாதம் குறைந்தது மூவாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு குடும்பத்தை தத்தெடுக்கலாம். எத்தனை குடும்பத்தை வேண்டுமானாலும் நீங்கள் இவ்வாறு தத்தெடுத்துக் கொள்ளலாம்.
வருமான வரிச் சட்டம் 80G பிரிவின் கீழ் உங்களுக்கான ரசீது அனுப்பப்படும். உங்களால் உதவி பெற்ற ஏழைகள் பொருட்களை பெறும் புகைப்படங்களும் உங்களுக்கு வழங்கப்படும். இந்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி நன்கொடை திரட்டும் பணியைத் தொடங்கினோம். வரும் ஜூலை 30ஆம் தேதி வரை இந்த பணி நடக்க உள்ளது என்றார். 900 குடும்பங்கள் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நிலமற்ற ஏழைகள், மிகக் கடுமையான ஏழ்மை நிலையுடன் இருக்கக்கூடிய குடும்பங்களைத் தேர்வுசெய்து, உதவி செய்ய தீர்மானித்துள்ளோம் அப்படியான குடும்பங்கள் தான் இவை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நீங்களும் குறைந்தது 3000 ரூபாய் கொடுத்து, சோடா கிராமத்தில், ஒரு குடும்பத்தை தத்து எடுத்துக்கொள்ளலாம். வருமான வரி விலக்கு பெற முடியும். ஏழைகளுக்கு உணவளிப்பது இறைவன் சேவையல்லவா. https://pages.razorpay.com/pl_EcTy5sFbPHCoBc/view என்ற பேஜுக்கு செல்லுங்கள். நீங்கள் தத்தெடுக்க விரும்பும் குடும்பங்களின் எண்ணிக்கையை உள்ளிடவும். ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு ரூ .3,000 செலவாகும். உங்கள், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை உள்ளிடவும். நன்கொடை என்பதைக் கிளிக் செய்க. ஏதேனும் சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால், நீங்கள் villagesoda@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.