சர்வதேச அரசியலில் கவனம் செலுத்தும் பலருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும் ஒரு பெயர் “சையது அக்பரூதின்” . இவர்தான் ஐ.நா-வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதராக 2016 -ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். கடந்த காலங்களில் சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஐ.நாவில் ஆணித்தரமாக எடுத்துக் கூறியவர். குறிப்பாக பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதங்களை உலக நாடுகளின் கவனத்துக்கும் ஐ.நாவின் கவனத்துக்கும் எடுத்துச் சென்றவர் சையது அக்பரூதின்.பாகிஸ்தானை மையமாகக்கொண்டு செயல்படும் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது-ன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா அறிவிக்க இந்தியா சார்பில் எடுக்கப்பட்ட கடும் முயற்சியில் அக்பரூதினின் பங்கை, அந்த விவாதங்களைப் பின்தொடர்ந்தவர்கள் எவராலும் மறக்கமுடியாது. காரணம், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்பட, இந்தியாவின் பணி அத்தனை எளிதாக இருக்கவில்லை. அதைத் திறம்படச் செய்துகாட்டிய சையது அக்பரூதின் விரைவில் ஓய்வு பெற இருக்கிறார். இந்த நிலையில் அவரது அந்தப் பொறுப்புக்கு அடுத்த நபரை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அவர் ஒரு தமிழர்.சென்னையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான டி.எஸ் திருமூர்த்திதான் சையது அக்பரூதினுக்குப் பிறகு ஐ.நா-வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது இந்திய வெளியுறவுத்துறையில் முக்கிய அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
தொடர்புடைய கட்டுரைகள்
சரிபார்க்கவும்
Close
-
திருநங்கையாக மாறிய WWE சூப்பர் ஸ்டார்!
5 days முன்பு