ஏற்கனவே கடந்த ஒருசில ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போதைய கொரோனா பிரச்சனை அதை மேலும் அதளபாதாளத்திற்குத் தள்ளிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.
உலக வங்கியின் ஒரு சமீபத்திய அறிக்கையின் படி, கடந்த 1991ஆம் ஆண்டுக்குப் பின் இந்த நிதியாண்டில்தான் இந்தியா ஒரு மோசமான பொருளாதார நிலைமையை சந்திக்கப் போகிறது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கத்தினால் ஏற்படும் இந்தக் கடும் வீழ்ச்சியைச் சமாளிக்க ‘ஹெலிகாப்டர் மணி’ திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி செயல்படுத்த வேண்டும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சமீபத்தில் பேசியிருந்தார்.
இவர் மட்டுமல்ல, சமீபத்தில் இந்தியத் தொழில்துறை சம்மேளனமும் இதுபோன்ற ஒரு திட்டத்தைப் பரிந்துரைத்தது. ரூ.5 லட்சத்துக்குக் கீழ் ஆண்டு வருமானம் ஈட்டும் ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் ரூ.5,000 பணத்தை செலுத்துமாறு அது பரிந்துரை செய்தது.
இந்த நடவடிக்கை கண்டிப்பாக, முற்றிலுமாக தற்காலிக நடவடிக்கைதான் என்றும் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய ஒரு அறிக்கையில் இந்தியத் தொழில்துறை சம்மேளனம் தெரிவித்திருந்தது.
‘ஹெலிகாப்டர் மணி’ என்றல் என்ன?
“வானத்திலிருந்து திடீரென ஒரு பணமழை பொத்துக் கொண்டு விழுந்தால் எப்படி இருக்கும்?” என நம்மில் சிலர் அவ்வப்போது நினைப்பதுண்டு; பேசுவதும் உண்டு.
ஹெலிகாப்டர் பணம் என்பது ஒரு பெரிய தொகையான புதிய பணத்திற்காக அச்சிடப்பட்டு பொதுமக்களிடையே விநியோகிக்கப்படுகிறது, மந்தநிலையின் போது பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கு அல்லது வட்டி விகிதங்கள் பூஜ்ஜியமாகக் குறையும் போது பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஹெலிகாப்டர் துளி என்றும் குறிப்பிடப்படுகிறது, இது ஒரு ஹெலிகாப்டர் வானத்திலிருந்து விநியோகிக்கும் பொருட்களைக் குறிக்கிறது.
அதேபோல்தான் பிரபல அமெரிக்கப் பொருளாதார வல்லுனரான மில்டன் ஃப்ரைட்மென் என்பவரும் ‘ஹெலிகாப்டரிலிருந்து யாராவது வானத்திலிருந்து பணத்தை அள்ளி வீசினால் எப்படி இருக்கும்’ என்ற அர்த்தத்தில் ‘ஹெலிகாப்டர் மணி’ என்ற சொல்லை முதலில் கடந்த 1969ல் உபயோகப்படுத்தினார்.
வழக்கத்திற்கு மாறாக, மதிப்பிட முடியாத அளவிற்கு பணத்தை அச்சடித்து அதை மக்களிடம் புழக்கத்தில் விட்டு, மந்தநிலையின் இருக்கும் பொருளாதாரத்தைத் தூண்டி அதனை சரி செய்ய முயலும் முறை தான் இந்த ஹெலிகாப்டர் மணி
மந்தமான ஒரு சூழலில் ‘ஹெலிகாப்டர் மணி’ பொருளாதாரத்திற்குப் புத்துயிர் அளிக்கும் என்று கருதப்படுகிறது.
இதன் மூலம், மக்கள் இயல்பாகவும் சுதந்தரமாகவும் பணத்தைச் செலவு செய்வார்கள்; மறுபக்கம், பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான மற்ற பல நடவடிக்கைகளை அரசு கவனிக்கத் தொடங்கும்.
மேலும், இதன் மூலம் தேவைகளை அதிகரிக்கவும், பணவீக்கத்தைக் கூட்டவும் முயற்சிக்கலாம். பணவீக்கத்தை ஏன் அதிகரிக்க வேண்டும் என சிலர் கேள்வி எழுப்பலாம்.
பணவீக்க குறைவு அல்லது விலைவாசி வீழ்ச்சி பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிப்பதால், அந்த சமயத்தில் நுகர்வோர் அல்லது வர்த்தகர்கள் தாம் வாங்கும் பொருட்களின் விலை மேலும் குறையும் எனக் கருதி செலவு செய்யத் தயங்குவர்.
வேலையில்லாத் திண்டாட்டம்
ஆனாலும், மக்கள் செலவு செய்வதைக் குறைக்கும்போது தொழில் நிறுவனங்களும் தங்கள் முதலீடுகளை நிறுத்திக் கொள்ளும்.
மேலும், எதிர்பாராத தற்போதைய சூழலில் வங்கிகளும் கடன் வழங்குவதை நிறுத்திவிடும். இவையெல்லாம் அடுத்தடுத்து நடக்கும் பட்சத்தில் நாட்டில் வேலையின்மையும் அதிகரிக்கும்.
லட்சக்கணக்கானோர் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்பதால் ‘ஹெலிகாப்டர் மணி’ திட்டம் எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்!
கொரோன பாதிப்பால் இந்தியா போலவே பல நாடுகள் பொருளாதார விழிச்சியை சந்திக்க நேரிட்டதால் , இந்த திட்டம் வேறு சில நாடுகளிலும் பின் பற்றப்படலாம் என கூறப்படுகிறது.