இந்த மாதிரியான குணங்களைக் கண்டீர்கள் எனில் அவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ளாதீர்கள்…
காதல் அழகானது. அது இருவரின் புரிதலாலும் , விட்டுக்கொடுத்துப் போவதாலும் பேரழகாகிறது. இது இல்லாத காதல்தான் கடைசி வரை நீடிக்காமல் போகிறது. அதற்கு ஆரம்பத்திலேயெ உங்களுக்குப் பொருத்தமான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதே நல்லது. எனவே ஆரம்பத்திலேயே இந்த குணங்களைக் கண்டீர்கள் எனில் அவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ள சற்று சிந்திப்பது நல்லது. அவை என்னென்ன குணங்கள் பார்க்கலாம். எப்போதும் இவர்கள் உங்களை எமோஷனலாக கார்னர் செய்பவராக இருப்பார். எந்த விஷயமாக இருந்தாலும் உங்களை எமோஷனல் வகையில் சாதிப்பார்.
நீ இல்லை என்றால் இறந்துவிடுவேன். பேசவில்லை எனில் கை அறுத்துக்கொள்வேன், நான் கூப்பிட்ட இடத்திற்கு வரவில்லை எனில் அழுவேன் , ஸ்டேட்டஸ் போடுவேன், இப்படி பல வகைகளில் உங்களை எமோஷ்னலாக பிளாக்மெயில் செய்பவர்களை வாழ்க்கை துணையாக ஏற்கலாமா என சிந்தியுங்கள். நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன் என்பது வார்த்தைகளில் மட்டும்தான் இருக்கும். செயலில் இதுவரை இல்லை. உங்களின் இக்கட்டான சூழ்நிலையில் உடல் இல்லை , உதவி செய்யவில்லை, புரிதல் இல்லை, அவர்களுடைய வேலையில் மட்டும் கவனமாக இருக்கிறார். குறிப்பாக அவர்களுடைய நண்பர்களுடனே அதிக நேரம் செலவிடுகிறார் எனில் இவர்களுடன் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
எந்த முடிவு எடுப்பதிலும் தன் நலத்தை மட்டுமே பார்க்கிறார். அதுமட்டுமன்றி தொடர்ந்து நீங்கள் மட்டும்தான் அவருக்காக செலவு செய்வது தொடங்கி, அக்கறை காட்டுவது வரை எல்லாமே செய்கிறீகள் எனில் கவனமாக இருங்கள். நீங்கள் கொடுத்த அன்பை அவரிடமிருந்து இன்றளவும் முழுமையாகப் பெறவில்லை எனில் சற்று சிந்தியுங்கள். உறவில் எந்த சண்டை வந்தாலும் தன்னுடைய தவறை ஒப்புக்கொள்ளாதவராக இருப்பார்கள். சில நேரங்களில் தன் மீது தவறே இல்லை என்றாலும் ஆமாம் என் மீதுதான் தவறு மன்னித்துவிடு என சொல்லும் விட்டுக்கொடுத்தல்தான் அந்த காதலை நீண்ட தூரம் பயணிக்க வைக்கும்.
மாறாக எல்லா தவறுக்கும் உங்களை கை காட்டினால் அவர் உங்களுக்கு சிறந்தவரா என சிந்தியுங்கள். தன் காதலை வெளிப்படுத்த தெரியாமல் திணறுகிறார் எனில் வாழ்க்கை முழுவதும் அவரிடமிருந்து சிறு அன்பு வார்த்தை, காதலை பார்த்துவிட மாட்டோமா என எதிர்பார்த்தே காலம் கடந்துவிடும். காதலில் உரையாடல் மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் பேசக் கூட முன் வருவதில்லை. நீங்கள் பக்கம் பக்கமாக பேசினால் கூட ஒரு வார்த்தைதான் பதிலாக வருகிறது எனில் நீண்ட நாள் பயணிப்பது கஷ்டம். எனவே யோசித்து முடிவெடுங்கள்.