அழகு குறிப்புகள்தகவல்கள்

இந்த 8 பொருட்களை கைகளால் தொடவே கூடாதாம்… அவை என்ன’னு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க..

நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தனிப்பட்ட தன்மைகள் இருக்கும். சில உறுப்புகள் மிகவும் மென்மையானதாக இருக்கும். சில உறுப்புகள் எந்த வித பாதிப்புகள் வந்தாலும் அதை பெரிய அளவில் எடுத்து கொள்ளாது. உள் உறுப்புகள் ஒரு விதமாகவும், வெளி உறுப்புகள் வேறு விதமாகவும் தன்மை கொண்டவை. ஆதலால் பெரும்பாலும் வெளி உறுப்புகளை காட்டிலும் உள் உறுப்புகளுக்கே அதிக பாதிப்புகள் உண்டாகும்.

பலருக்கு இந்த பாதிப்புகள் ஆரம்ப காலத்தில் தெரியாது. நீண்ட காலத்திற்கு பிறகே உறுப்புகளில் ஏற்பட கூடிய பாதிப்புகள் என்னென்ன என்பது தெரிய வரும். உறுப்புகளில் நாம் பெரிதாக கவலைபடாமல் இருக்க கூடிய உறுப்பு கைகள் தான். எந்த ஒரு பொருளை எடுக்க வேண்டுமென்றாலும் அதற்கு கைகள் தான் மிகவும் அவசியம்.

ஆனால், இந்த கைகளுக்கும் பலவிதங்களில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கைகளால் நாம் தொடுகின்ற சில பொருட்கள் ஆபத்தான விளைவுகளை கைகளுக்கு ஏற்படுத்துமாம். அவை என்னென்ன பொருட்கள் என்பதை பற்றி இனி அறிந்து கொள்வோம்.

1.ஆன்டி பாக்டீரியல் சோப்புகள்
பல வீடுகளில் இந்த பழக்கம் இன்று வரை நீடித்து வருகிறது. அதாவது, கைகளை கழுவும் போது சோப்புகளை பயன்படுத்துவர். இது மிக மோசமான பாதிப்பை கைகளுக்கு ஏற்படுத்தும் இது போன்ற ஆன்டி பாக்டீரியல் சோப்புகள் கைகளில் அரிப்பு, சொறி போன்றவற்றை கூட உண்டாக்க கூடும்.

2.ரப்பர் கையுறைகள்
பொதுவாக கைகளில் அணியப்படும் கையுறைகளை மிக கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பாக ரப்பர் வகை கையுறைகளை பயன்படுத்த கூடாது.

இவை லேடெக்ஸ் என்கிற வேதி பொருளால் தயாரிக்கப்படுவதால் கைகளில் அணியும் போது அலர்ஜிகளை ஏற்படுத்தி மோசமான பாதிப்புகளை கைகளுக்கு உண்டாக்கும்.

3.வெப்ப காற்று
கைகள் அதிக அளவில் வெப்பம் தர கூடிய வெப்ப காற்றை கைகளின் ஈரத்தை நீக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பயன்படுத்தினால் அதுவும் பாதிப்புங்களை உண்டாக்கும். மேலும், கைகளின் ஈரப்பதத்தை இவை முழுவதுமாக பாதிக்க கூடும். ஆகவே, இது போன்ற கருவிகளை தவிர்ப்பது நல்லது.

4.நைல் பாலிஷ்
சிலருக்கு கைகளில் வைக்கப்படும் நைல் பாலிஷ் கூட ஒத்து கொள்ளாது. இது ஒவ்வொருவரின் உடன் அமைப்பையும் பொருத்தே மாறுபடும். விரல்களில் வைக்கப்படும் நைல் பாலிஷ்கள் நகத்தோடு சேர்த்து முழு கைகளையும் பாதிக்க கூடும். ஆதலால், அடிக்கடி நைல் பாலிஷ் வைக்கும் பழக்கத்தை தவிர்த்து விடுங்கள்.

5.பாடி ஸ்ப்ரே
சிலர் பாடி ஸ்பிரேவை கைகளுக்கும் அடித்து கொள்வர். இது போன்ற செயல்கள் கைகளை பாதித்து விடும். சிலருக்கு இது ஒவ்வாமை ஏற்படுத்தி அரிப்புகள், சொறி போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். ஆதலால், வாசனைக்காக கூட இது போன்ற செயல்களை செய்து விடாதீர்கள்.

6.கிரீம்
பொதுவாகவே நமது கைகளில் பெட்ரோலியம் பொருட்கள் கலந்த கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது போன்ற அதிக வேதி தன்மை நிறைந்த பொருட்கள் உள்ள கிரீம்களை கைகளுக்கு தடவினால் அதனால் நிச்சயம் பாதிப்புகள் கைகளுக்கு உண்டாகும். பல சமயங்களில் கைகள் அரித்த படியே சிவப்பாக மாறி விடும்.

7.பாடி லோஷன்
உடலுக்கு போட்டு கொள்ளும் பாடி லோஷனை கைகளில் எப்போதுமே தடவ கூடாது. இது போன்ற பழக்கம் தான் கைகளுக்கு பாதிப்பை உண்டாக்குகிறது. இவை கைகளில் உள்ள துளைகளை அடைத்து விடும். இதனால் தோலின் ஈரப்பதம் முற்றிலும் மாறுபட்டு வறட்சியை உண்டாக்கி விடும்.

8.அழகு சாதனங்கள்
நமக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக கண்ட அழகு சாதன பொருட்களை பயன்படுத்த கூடாது. குறிப்பாக வேதி தன்மை நிறைந்த பொருட்களை கைகளுக்கு நிச்சயம் பயன்படுத்த கூடாது. இவை கைகளை மட்டும் பாதிக்காமல், உடல் ஆரோக்கியத்தையும் சேர்த்தே பாதித்து விடும்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.