தமிழ்நாடு

அமைச்சர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று..!

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தருவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. முதலமைச்சரின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருந்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும் சோதனை செய்துகொண்ட நிலையில், அவருக்கு தொற்று உறுதியானது.

இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே செல்லூர் ராஜு, தங்கமணி, கே.பி.அன்பழகன், நிலோபர் கபில் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மீண்ட நிலையில், தற்போது மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.