“அனுஷ்கா ஷர்மாவிடம் வாழ்க்கைப் பாடங்களை கற்றுக்கொண்டேன்” -விராட் கோலி
அண்மையில் நடந்த ஆன்லைன் உரையாடலில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தனது மனைவி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவிடமிருந்து நிறைய வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொண்டதாக செய்தியை வெளியிட்டார். அன்னகாடமி ஏற்பாடு செய்த ஆன்லைன் அமர்வில் மாணவர்களை ஊக்குவிக்கும் போது கிரிக்கெட் வீரர் இவ்வாறு கூறினார்.
கோலி கூறுகையில், இதற்கு முன்பு நான் மிகவும் அவசர வைத்தியாக இருந்தேன், அனுஷ்கா ஷர்மாவை சந்தித்த பிறகு, நான் பொறுமை யை கற்றுக்கொண்டேன்.அனுஷ்காவின் ஆளுமையும் , இக்கட்டான சூழ்நிலைகளில் அவர் காட்டும் தெளிவும் பல சூழ்நிலைகளில் என்னை பிரச்சனையை எதிர்த்துப் போராடத் தூண்டியது” என்று அவர் கூறினார்.
சூழ்நிலைகள் கடினமாக இருக்கும்போது கூட ஈகோவை விட்டு இன்பத்துடன் இருக்க வேண்டும், வெளியே செல்லும் வழியில் கண்டுஅறிய நாம் போராடும் பொது இறுதியில் கண்டிப்பாக ஒரு வழி இருக்கும் என்று கிரிக்கெட் வீரர் அறிவுறுத்தினார். அனுஷ்காவிடம் இதை பார்த்த கோஹ்லி, அவரிடமிருந்து இந்த குணத்தை கற்றுக்கொண்டார். கொரோனா வைரஸைப் பற்றி, கோலி தொற்றுநோய்க்குப் பிறகு உலகம் மாறும் என்று கூறினார், மேலும் சமூகத்தில் இப்போது உருவாகியுள்ள இரக்கம் இயல்புநிலைக்குப் பின்னும் இருக்கும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.