வாணியம்பாடி: வாணியம்பாடியில் ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி, வியாபாரிகளிடம் இருந்து பழங்களை பறித்து சாலைகளில் வீசியதற்காக நகராட்சி கமிஷனர் மன்னிப்பு கோரியுள்ளார். கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெரும்பாலான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நகராட்சி கமிஷனர் சிசில் தாமஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பழக்கடை ஒன்றில் ஊரடங்கு விதியை பின்பற்றவில்லை எனக்கூறி பழங்களை தள்ளிவிட்டார். தள்ளுவண்டியில் வியாபாரம் நடந்த கடையில் தனி மனித இடைவெளி பின்பற்றவில்லை எனக்கூறி பழங்களை சாலையில் வீசினார். மற்றொரு கடையில் பலகையை தள்ளிவிட்டதால், அங்கிருந்த பழங்கள் அனைத்தும் சாலையில் உருண்டன. பழங்களோடு இருந்த தள்ளுவண்டியையும் கவிழ்த்தார். நகராட்சி கமிஷனரின் செயல், வியாபாரிகள் மற்றும் அங்கிருந்த மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சமூக தொற்றுபோல் கொரோனா பரவல் மாறிவிடக்கூடாது என்பதற்காக அவ்வாறு செய்ததாக தனது செயலுக்கு விளக்கமளித்தார். நகராட்சி கமிஷனரின் பழங்களை தள்ளிவிட்டது சமூக வலைதளங்களில் பரவியது. பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து வியாபாரிகளை சந்தித்த சிசில் தாமஸ், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் நிவாரணமாக அரிசி மூடைகளை வழங்கினார். வியாபாரிகளும், அரசின் உத்தரவை மீறியதற்காக வருத்தம் தெரிவித்தனர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சரிபார்க்கவும்
Close
-
அதிமுக கொடியுடன் தமிழகம் நோக்கி சசிகலா
5 days முன்பு