Whatsapp அறிமுகம் செய்த புதிய அம்சம்: இனி ஒரு கிளிக் போதும் உங்கள் போன்னில் ஸ்டோரேஜ் பிரச்சனையே வராது..
Whatapp செயலியில் புதிய சேமிப்பு மேலாண்மை அம்சம் அறிமுகமாகியுள்ளது. இந்த அம்சம் தேவையற்ற வாட்ஸ்அப் வீடியோக்கள், மீடியா ஃபைல்கள் உள்ளிட்டவைகளை எளிதாக நீக்குவதற்கு உங்களை அனுமதிக்கிறது. வாட்ஸ்அப் அறிமுகம் செய்யும் புது அம்சம் சமூகவலைதள பயன்பாடுகளில் பிரதான ஒன்றாக இருப்பது வாட்ஸ்ஆப். வாட்ஸ்அப் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. பல்வேறு தேவைகளுக்கு வாட்ஸ்ஆப் பயன்பாடு என்பது பிரதானமாக இருந்து வருகிறது.
புதிய சேமிப்பு மேலாண்மை அம்சம்
தேவையற்ற வாட்ஸ்அப் வீடியோக்கள், மெசேஜ்கள் மற்றும் மீடியா ஃபைல்களை நீக்குவதற்கான புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப் அறிமுகம் செய்த புதிய சேமிப்பு மேலாண்மை அம்சமானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கிறது. வாட்ஸ்அப் சேட்களின் அனைத்து மெசேஜ்களையும் ஒரே கிளிக்கில் நீக்க இது அனுமதிக்கிறது.
We’ve made it easy to review, bulk delete items and free up space. This new storage management tool can be found in Settings > Storage and Data > Manage Storage. pic.twitter.com/eIMFZ1Oyzr
— WhatsApp Inc. (@WhatsApp) November 3, 2020
ஒரே கிளிக்கில் நீக்கலாம்
வாட்ஸ்அப் புதிய அம்சம் ஆவணங்கள்(Document), லிங்க்குகள்(Links), டெக்ஸ்ட், தொடர்புகள் (contact), வீடியோக்கள், ஸ்டிக்கர்கள், புகைப்படம் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை ஒரே கிளிக்கில் நீக்க அனுமதிக்கிறது.
ஆண்ட்ராய்டு பயனர்கள்
வாட்ஸ்அப்பை ஓபன் செய்து கொள்ளவும், மேலே வலது பக்கத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும். அதில் செட்டிங்க்ஸ் தேர்வை கிளிக் செய்யவும். அதில் தரவு மற்றும் சேமிப்பக பயன்பாடு(Data and Storage usage) என்பதற்குள் சென்று சேமிப்பக நிர்வகித்தல் (Manage Storage) என்ற ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும்.
5 எம்பிக்கு பெரிதாக இருக்கும் ஃபைல்கள்
இதில் 5 எம்பிக்கு பெரிதாக இருக்கும் ஃபைல்களை தனியாக காண்பிக்கும் பிரிவு பயனர்களுக்கு காண்பிக்கப்படும். இது பயனர்களை முற்றிலும் தேவையில்லாத தகவல்களை நீக்க அனுமதிக்கிறது. தொடர்பு பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு சேட்டிங்கும் எவ்வளவு சேமிப்பு இடத்தை எடுத்துள்ளது என இது காண்பிக்கும்.